காவலர்களை நெகிழ வைத்த மாவட்ட கண்காணிப்பாளர்
தமிழகமெங்கும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து மாவட்ட எல்லைகளும் காவல்துறையால் கண்காணிப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லையில் உள்ள கங்கைகொண்டான் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் அனைவருக்கும் தேநீர், பிஸ்கட், பழங்கள் மற்றும் கப சுர குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கி காவலர்கள் அனைவரும் பாதுகாப்புடன் பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் வாகன வருகை பதிவேடுகளை பார்வையிட்ட அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது, காவல் அதிகாரிகள் காவலர்கள் என 1700 பேர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள். மருத்துவம், திருமணம் மற்றும் அவசர தேவைகளை தவிர தேவையின்றி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கொரானா ஊரடங்கு சமயத்தில் அதிக பணிசுமை காரணமாக காவலர்கள் மனசோர்வடைந்துள்ள நிலையில், மாவட்ட கண்காணிப்பாளரின் இந்த செயல் காவலர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu