55 குவாரிகளில் ஆய்வு: விரைந்து அறிக்கை சமர்பிக்க நெல்லை ஆட்சியர் உத்தரவு

55 குவாரிகளில் ஆய்வு: விரைந்து அறிக்கை சமர்பிக்க நெல்லை ஆட்சியர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகளை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு ஆலோசனை.



குவாரிகளை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்பிக்க மாவட்ட த்தில் அமைக்கப்பட்டுள்ள 6 குழுக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆலோசனை நடத்தினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் மாவட்டத்திலுள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்டுள்ள 6 குழுக்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (23.05.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்ததாவது. -

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 நபர்கள் உயிரிழந்தனர். அவர்களை மீட்கும் பணி தேசிய மீட்புக்குழுவினர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்துறை, பொதுமக்கள் உதவியுடன் மீட்புப்பணியினை முடித்துள்ளோம்.

மாவட்டத்திலுள்ள 55 கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க துணைஆட்சியர் தலைமையில் நிலஅளவையர், காவல்துறையினர், வருவாய்துறை சார்ந்தவர்கள் கனிமவளத்துறையினர் ஆகியோர் அடங்கிய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டு குவாரிகளை ஆய்வு செய்து விரைந்து அறிக்கை சமர்பிக்க உத்திரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இக்கூட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமார், இணை இயக்குநர் கனிமவளத்துறை குருசாமி, கோட்டாச்சியர்கள் சந்திரசேகர், சிந்து, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story