நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
X

நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்.

நெல்லையில், பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாமினையொட்டி முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து ஊசிபோட்டுக் கொண்டனர்.

புதிதாக உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை, தினமும் 600க்கு மேல் பதிவாகிறது. இதனைத் தடுக்க, அரசு உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி கடந்த 10- ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 9 மையங்களில் போடப்படுகிறது. இதுபோன்று புறநகர் பகுதியில் 8 அரசு மருத்துவமனைகள், 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வீடு வீடாக சென்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. சிறப்பு முகாமில் முன்களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து ஊசிபோட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்