நெல்லை சங்கர் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டும் விழிப்புணர்வு பயிலரங்கு

நெல்லை சங்கர் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டும் விழிப்புணர்வு பயிலரங்கு
X

சங்கர் நகர் சங்கர் மேனிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டும் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

நெல்லை சங்கர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்.

நெல்லை சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டும் விழிப்புணர்வு பயிலரங்கம்.

நெல்லையை அடுத்த சங்கர் நகர் சங்கர் மேனிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ், என்.சி.சி,தேசிய பசுமைப் படை, சாலை பாதுகாப்பு படை, குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஈட் ரைட் கிளப் திருநெல்வேலி சார்பில் குட்கா, பான் மசாலா பயன்பாட்டு, பாதிப்பு, சாலை பாதுகாப்பு, தனி மனித ஒழுக்க நெறி, பற்றிய வழிகாட்டும் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் உ.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தாழையூத்து உட்கோட்ட டி.எஸ்.பி.ஜெயராஜ், தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை ஆகியோரின் வழிகாட்டுதல்படி உதவி ஆய்வாளர் சாவித்திரி, பள்ளி சாலை பாதுகாப்பு படை மற்றும் தேசிய பசுமைப் படை திட்ட அலுவலர் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

பள்ளி என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சொ. உடையார், உதவி ஆய்வாளர் கணேசன், தலைமை காவலர் சந்திரன், முதல் நிலை காவலர் மருதுபாண்டி மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்வில் சாலை கடக்கும் நெறிகள், நல்ல தொடுதல், ஒற்றுமை உணர்வு, ஒழுக்க நெறி, போதை, பாதிப்பு போன்ற பல கருத்துகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவாக உதவி தலைமையாசிரியர் ஆ.ரெங்கநாதன் நன்றி கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!