ஜெயலலிதா பிறந்த நாளையாெட்டி நெல்லையப்பர் கோவிலில் அதிமுகவினர் அன்னதானம்

ஜெயலலிதா பிறந்த நாளையாெட்டி நெல்லையப்பர் கோவிலில் அதிமுகவினர் அன்னதானம்
X

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாளையொட்டி நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதன் ஒருபகுதியாக நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் பரணி.A.சங்கரலிங்கம் ஏற்பாட்டில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை- கணேசராஜா, கழக அமைப்புச் செயலாளர் சுதா K.பரமசிவன், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் இ.வேலாயுதம், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே ஜே சி ஜெரால்டு, 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர், நெல்லை பகுதி கழக செயலாளர் மோகன், நெல்லை கிழக்குப் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!