நெல்லையில் பிரச்சார ஒலிபெருக்கியுடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

நெல்லையில் பிரச்சார ஒலிபெருக்கியுடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
X

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பாலுசாமி பிரச்சார ஒலிபெருக்கியுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பாலுசாமி பிரச்சார ஒலிபெருக்கியுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 22 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ் பாலுசாமி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலியில் 22 வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.பாலுசாமி இன்று காலை திருநெல்வேலி டவுன் பகுதியில் தடிவீரன் கோவில் தெரு தைக்கா தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வாக்காளர்களை கவரும் விதமாக கையில் பிரச்சார ஒலிபெருக்கியை ஏந்தியபடி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல்களை ஒலி பெருக்கியில் ஒவிர விட்டு ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!