நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லை மாநகராட்சி 22வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருநெல்வேலி மாநகராட்சி 22 வது வார்டில் ஆஇஅதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

திருநெல்வேலி மாநகராட்சியில் 22வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் S.பாலுசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

திருநெல்வேலி மாநகராட்சி 22 வது வார்டில் ஆஇஅதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் திருநெல்வேலி டவுனில் உள்ள 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ். பாலுசாமி வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. இதனால் மக்கள் திமுக அரசு மீது கடுமையான வெறுப்பில் இருக்கின்றனர். மக்களுடைய ஆதரவு இரட்டை இலை சின்னத்திற்கு அதிகமாக இருப்பதால் வெற்றி பெறுவது உறுதி. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் 22வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக எளிதில் கிடைக்க பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி