நெல்லை மாவட்டத்தில் குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களை சந்தித்தார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 சுரங்க துறை நிபுணர்களும் பங்கேற்பார்கள். ஆய்வறிக்கையின் அடிப்படையில் குவாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் நெல்லை அடைமிதிப்பான் குளம் குவாரியில் மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் பகுதியில் உள்ள தனியார் குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிவு ஏற்பட்டு குவாரிக்குள் விழுந்தது. இதில் 6 பேர் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 8 நாட்கள் மீட்பு பணி நடத்தப்பட்டு 6 நபர்கள் மீட்கபட்டுள்ளனர். இந்திய விமானப்படை ஐஎன்எஸ் பருந்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. கூடங்குளம், எல்&.டி ஆகிய இடங்களில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்டப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆறாவது நபர் மீட்கப்பட்ட நிலையில் குவாரி மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குவாரியை இன்று மீண்டும் ஆய்வு செய்த நிலையில், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது- நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் பிற மாவட்ட அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். இந்த குழுவின் தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் இடம்பெறுவார். துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வருவாய் துறை, கனிம வளத்துறை, காவல்துறையினரும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். இந்த குழுக்களின் ஆய்வு அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் குவாரிகளின் மீது எடுக்கப்படும். போர்க்கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படும் இதனிடையே குவாரி விபத்தில் உயிரிழந்த செல்வகுமாரின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்று விட்டனர். மற்ற 3 உயிரிழந்தவர்கள் உடலை வாங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசின் திட்டங்கள் தகுதியாக இருந்தால் அவர்களுக்கு அதனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டத்தில் இருந்து சிறப்பு குழுவில் சுரங்கதுறை சார்ந்த 18 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவித்தார். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினரை பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu