ஸ்டாலின் பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை -முதல்வர்

ஸ்டாலின் பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை -முதல்வர்
X

தமிழக மக்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சை ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் அவர் பேசுகையில்,கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்கள். ஆனால் யாருக்குமே வழங்கவில்லை. இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதுதான் திமுக. விவசாய குடும்பத்தைச் சார்ந்த நான் முதல்வரானது போல திமுகவில் ஒருபோதும் நடக்காது.

ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுகிறார். 3 மாதத்தில் ஆட்சிக்கு வருவேன். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் என்கிறார். கடந்த முறை திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதெல்லாம் மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாதவரா தற்போது தீர்க்கப்போகிறார். தமிழக மக்கள் திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சை ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்றார் .

அவருடன் அமைச்சர்கள் உதயகுமார், விஜயலெட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, நாராயணன், முன்னாள் எம்.பி., விஜிலா சத்தியானந்த், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, களக்காடு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future