/* */

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை-SDPI

திருநெல்வேலி மேலப்பளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்றார்.

HIGHLIGHTS

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை-SDPI
X

மேலப்பாளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்றார்.

பக்ரீத் என்று அழைக்கப்படும் தியாகத்திருநாள் சிறப்பு தொழுகை‌ மேலப்பாளையம் விரிவாக்க பகுதியான கரீம் நகர் மஸ்ஜித்ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது

மீரான் முகைதீன் அன்வாரி தொழுகை நடத்தினார் , தலைமை இமாம் சாகுல் ஹமீது உஸ்மானி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார், தொழுகையில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கரிம் என்ற கனி, மஸ்ஜித்ஹுதா செயலாளர் முஸ்தபா ஜாபர்அலி , பொருளாளர் ஜவஹர், தாவுத் ஹாஜியார்,எம்.எஸ்.ஜெய்னுல்ஆபிதீன், முஸ்தபா, எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனி மாவட்ட செயலாளர் லெப்பை உட்பட ஆண்கள் , பெண்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் முககவசம் அனிந்து கலந்து‌ கொண்டனர் , தொழுகை முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த நெல்லை முபாரக் அவர்கள் வாழ்த்து செய்திகளை கூறினார். மேலும்

இன்றைய பெருநாளைக்கு காரணமான இறைதூதர் இப்ராஹிம் நபி அவர்களின் வாழ்வு நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகின்றது, ஆகவே, தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் இடர்படுகிற சோதனைகளை எல்லாம் தாங்கி, பாசிச சர்வாதிகாரத்திடமிருந்து மக்களை பாதுகாக்கவும், மக்களிடையே அன்பும், சமாதானமும் தழைத்திடவும், ஜனநாயகம் ஓங்கிடவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திடவும், சமூக நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் காத்திடவும், அநீதியை தகர்த்து நீதியை வென்றிடவும் தியாகங்கள் பல செய்திட உறுதியேற்போம்.

இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் வாழவும், குறைகள் நீங்கி நிறைவாழ்வு பெற்றிடவும், கொரோனா பெருந்தொற்றால் பரிதவித்து நிற்கும் மக்களின் துயர் நீங்கிடவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எமது தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

Updated On: 21 July 2021 1:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...