விபத்துகளை தடுக்க சாலைகளை மிக தரமாக அமைக்க வேண்டும் : கலெக்டர் விஷ்ணு வலியுறுத்தல்

விபத்துகளை தடுக்க சாலைகளை மிக தரமாக அமைக்க வேண்டும் : கலெக்டர் விஷ்ணு வலியுறுத்தல்
X

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு 

அதிக அளவில் விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் சாலைகள் சரிவர இல்லாத நிலையே -நெல்லை மாவட்ட ஆட்சியர்.

பாரதப் பிரதமர் கிராமச்சாலை திட்டம் சார்பில் ஊரக சாலைகள் தரமாக அமைப்பது தொடர்பான கருத்தரங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கருத் தரங்கை தொடங்கி வைத்தார்.

அப்போது ஆட்சியர் பேசுகையில் நம்பகுதியில் தான் அதிக அளவில் விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் சாலைகள் சரிவர இல்லாத நிலை உள்ளது. எனவே சாலைகளை மிக தரமாக அமைக்க வேண்டும் மேலும் சாலை பணிகளை எடுக்கும் ஒப்பந்தகாரர்கள் திற பெற்றவர்களா என்பதையும் அவர்களும் நவீனத் தொழில் நுட்பத்தையும் அறிந்தவர்களா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும், ஊரக சாலைகள் மிக முக்கியம். எனவே மிகவும் தரம் வாய்ந்த சாலைகளாக அமைக்க வேண்டும் என தெரிவித்தார் . இதனைத் தொடர்ந்து சாலைகள் தொடர்பான தர கட்டுப்பாட்டு முதன்மைப் பொறியாளர் இசக்கிமுத்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

சாலைகள் அமைப்பது தொடர்பாக தொழில் நுட்ப இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!