பொதுமக்களுக்கு போலி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண் கைது

பொதுமக்களுக்கு போலி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண் கைது
X

 வசந்த குமாரி.

கூடன்குளத்தில் பொதுமக்களுக்கு போலி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போலியாக மருத்துவ அளித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கூடங்குளம் பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கூடங்குளம் பகுதியில் வீ.கே மெடிக்கல் என்ற பெயரில் நடத்திவரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள வட்டவிளையை சேர்ந்த வசந்தகுமாரி(42) என்பவர் அப்பகுதி மக்களுக்கு எந்த வித அரசு அனுமதி பெறாமல் மருந்தகத்தின் உள்ளே பொது மக்களுக்கு ஊசி போட்டு வந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த வருடமும் இதே போன்று சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நிலையில் மீண்டும் இது போன்று போலியான மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததுள்ளார்.

கூடங்குளம் காவல்துறையினருக்கு இதுக்கு குறித்து தகவல் வந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வசந்தகுமாரி முறையான மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, மருத்துவம் பார்த்து வந்த வசந்த குமாரி மீது வழக்கு பதிவு செய்து வசந்தகுமாரியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!