காற்றின் வேகம் அதிகரிப்பு : காற்றாலை மின் உற்பத்தி 3000 மெகாவாட்டை எட்டியது
பைல் படம்
காற்றின் வேகம் காரணமாக அதிகரித்த காற்றாலை மின்சாரம். 3000 மெகாவாட்டை கடந்து சாதனை. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 3050 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 17,000 மெகாவாட் தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன். இந்த காலகட்டத்தில் அதிக அளவில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது. தமிழகத்தில் 13000 ஆயிரத்துக்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. தென் மாவட்டங்களான நெல்லை ,கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10000க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
உலகிலேயே கலிபோர்னியா மாகாணத்திற்கு அடுத்தபடியாக அதிக காற்று வீசும் பகுதி நெல்லை மாவட்டத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் இடையே உள்ள ஆரல்வாய்மொழி பகுதியாகும். இந்த நிலையில் தற்போது காற்று சீசன் துவங்கியுள்ளது. கடந்த வாரம் வரை 500 மெகாவாட்டுக்கும் குறைவாக கிடைத்த காற்றாலை மின்சாரம். தற்போது கடந்த இரண்டு தினங்களில் ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வந்தது. கடந்த மே 1 ஆம் தேதி 2097 மெகாவாட்டை எட்டியது.
இந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்றைய நிலவரப்படி ஒட்டு மொத்தமாக காற்றாலை மின் உற்பத்தி 3௦5௦ மெகாவாட்டை எட்டியுள்ளது. காற்றின் வேகத்தை பொருத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu