வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
X

பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தில் வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் தக்ஷிண மாற நாடார் சங்கம் கல்லூரியில் வன உயிர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

வன உயிர் பாதுகாப்பு தினமும் கடந்த 3ஆம் தேதி பல இடங்களில் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள தக்ஷிண மாற நாடார் சங்க கல்லூரியில் வன உயிர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

பின்னர் இந்திய செஞ்சிலுவைச் சங்க நாங்குநேரி செயலர் சபேசன் முதலுதவி குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினார். பின்னர் பாம்புகள் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் செல்வன் பாம்புகள் குறித்த விளக்கங்கள், அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் எனவும் பாம்புகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் வழங்கினார். பின்னர் நிகழ்வில் உடற்கல்வி இயக்குனர்கள் ஜெய்சன் மற்றும் மதியரசி, பேராசிரியர்கள் ஹரி கிருஷ்ணன், சுஜா, விஜயா, ஜெப ஸ்டெல்லா, ராஜகுமாரி, அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் மைக்கேல் ஜேசாய், மகேஷ் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் முனைவர் புஷ்பராஜ் நன்றி கூறினார்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்