நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
X

பைல் படம் 

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது இளங்காவடி குளத்தின் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தார்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஜமால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த கமல கண்ணன்(33), இசக்கி பாண்டி(29) இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!