அடிதடி,கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

அடிதடி,கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
X

திருநெல்வேலி இராதாபுரத்தில் அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இராதாபுரம் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகளில் எதிரியான இராதாபுரம், பாவேந்தர் பாரதிதாசன் நகரை சேர்ந்த வேலு என்பவரின் மகன் மணிகண்டன்(21), என்பவர் தொடர்ந்து அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் கவனத்திற்கு வந்ததால், மணிகண்டனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் வட்ட இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோவுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட எஸ்பி.,பரிந்துரையின் படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை.,சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!