/* */

கூடங்குளம் 3வது அணு உலையில் அணுவுலை அழுத்த கலன் பொருத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலையில் வருகிற மார்ச் 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கூடங்குளம் 3வது அணு உலையில் அணுவுலை அழுத்த கலன் பொருத்தப்பட்டது.
X

கூடங்குளம் அணுமின் நிலையம் 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது அணு உலையில் அணுவுலை அழுத்த கலன்(REACTOR PRESSURE VESSEL) பொருத்தப்பட்டது. 332 டன் எடைகொண்ட இந்த அழுத்த கலனானது 200 மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. அணு கதிர்வீச்சை வெளியே விடாமல் தாங்கும் தன்மை கொண்டது.

கடந்த ஜூன் 2017 ஆம் ஆண்டு மூன்றாவது அணு உலைக்கான முதல் காங்கிரீட் போடும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 39 ஆயிரத்து 747 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த மூன்றாவது அணு உலையானது வருகிற மார்ச் 2023 ஆம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பவான் சந்திர பதக் மற்றும் திட்ட இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட அணு மின் நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2022 1:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...