முதல்வர் ஸ்டாலின் கார் மீது டம்ளர் வீச்சு

முதல்வர் ஸ்டாலின் கார் மீது டம்ளர் வீச்சு
X
நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் சென்ற வாகனத்தின் மீது சில்வர் குவளையை வீசிய டீ மாஸ்டரால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சேத சீரமைப்பு பணிகளை சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றடைந்தார். மாலை 4 மணிக்கு மேல் நாகர்கோவில் மற்றும் பேயன் குழி ,உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பணிகளை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

முன்னதாக நெல்லை மாவட்ட காவல் கிணறு எல்லையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெல்லை வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவல் கிணறு விலக்கு அருகே முதல்வர் வரும் பொழுது, அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர், சில்வர் கிளாஸ் ஒன்றை எறிந்ததோடு மட்டும் அல்லாமல், அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்றில் ஏறி தப்பி சென்றுள்ளார்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திமுக பிரமுகர்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த கடையை மூட உத்தரவிட்டனர்.

Tags

Next Story
கல்லீரல் பாதுகாக்க சில வழிகளை காணலாமா..? அப்போ இதோ உங்களுக்கான குறிப்பு..!