மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர்

மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர்
X

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாஸ்க் அணிந்து வரும் பொது மக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இனிப்பு வழங்கினார்.

தமிழகத்தில் தற்போது கொரொனா வைரஸ் இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப் படுத்த பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்து வரும் நிலையில் காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.இந்நிலையில் வள்ளியூர் நகர போலீசார் மாஸ்க் போடாத பொது மக்களுக்கு அபராதம் விதித்தாலும் மாஸ்க் போட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இனிப்பும் வழங்கி சப் இன்ஸ்பெக்டர் அருண் ராஜா பாராட்டி வருகிறார். அவரது இந்த செயல் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா