வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
X

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே வீட்டின் கதவை உடைத்து சுமார் 13 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல்லை சோ்ந்தவா் சிவா(39). விஜயநாராயணம் ஐ.என்.எஸ்.கடற்படை தளத்தில் கட்டட மேற்பாா்வையாளராக பணியாற்றும் இவா் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவரும், இவரது மனைவியும் இருவரும் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டில் வைத்திருந்த சுமார் 13 பவுன் தங்க நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story