தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு
மத்திய அரசின் நீர்வளத் துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009 ல் தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் போது தினமும் 3200 கன அடி வீதம் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பி விடும் திட்டம் இது.
தாமிரபரணியில் இருந்து பிரியும் புதிய கால்வாயுடன் பச்சையாறு, கருமேனியாறு, நம்பியாறு ஆகியவற்றையும் இத்திட்டம் இணைக்கிறது. அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் துவங்கி திசையன்விளை அருகே எம்.எல்.தேரி வரையிலும் 75 கி.மீ.க்கு தாமிரபரணி நதி நீரை கொண்டு செல்வதாகும். இந்த திட்டத்தின் 3 ஆம் கட்ட பணிகளை தமிழக சபாநாயகர் அப்பாவு அதிகாரிகளுடன் கோட்டைகருங்குளம் மற்றும் மன்னார்புரம் பகுதிகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu