3 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா

3 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா
X

சிறப்பு அலங்காரத்தில் சுடலை ஆண்டவர்.

திசையன்விளையில் உள்ள ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா மூன்று நாட்கள் அன்னதானத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், திசையன்விளை வடக்கு தெரு சுடலை ஆண்டவர் கோவில் அப்பகுதி சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த ஆண்டு கொடைவிழா நடந்தது.

இந்த ஆண்டு கொடைவிழா கடந்த புதன்கிழமை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

இரவில் சுவாமிக்கு மாக்காப்பு அலங்கார பூஜை மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரண்டாம் நாள் கோவிலில் ஆனந்த வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம், வில்லிசை, மகுட ஆட்டம், அலங்கார பூஜை நடைபெற்றது.

மூன்றாம் நாள் அன்னபூஜை ஆனந்த வினாயகர் கோவிலில் இருந்து மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடல், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவில் வில்லிசை, மகுட ஆட்டம், நையாண்டி மேளத்துடன் சுவாமிக்கு விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடந்தது.

இதில் வரி அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூன்று நாட்களும் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

கொடைவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் கே.செல்வராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர். கொடை விழாவில் அப்பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!