பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாய் சீரமைப்பு பணிகள்: சபாநாயகர் மு.அப்பாவு தகவல்

பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாய் சீரமைப்பு பணிகள்: சபாநாயகர் மு.அப்பாவு தகவல்
X
பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாயில் மண்சரிவு அகற்றுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் விரைவாக தொடங்கப்படும் என சபாநாயகர் மு.அப்பாவு தகவல்.

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆலந்துறையாறு கால்வாயில் கடந்த ஆண்டு மண் சரிவு ஏற்பட்டதால் மதுரை உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் மு.அப்பாவு வழக்கு தொடர்ந்து, உத்திரவு பெற்று ஆலந்துறையாறு கால்வாய் சீரமைக்கப்பட்டதால் ஆலந்துறையாறு மற்றும் அனுமன் நதி மூலம் பாசனம் பெறும் நாற்பத்தி ஏழு குளங்களும், மானவாரிகுளங்களும் நிரம்பியது.

கடந்த பருவமழையினால் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டு மீண்டும் ஆலந்துறையாற்றில் தொடர் மண்சரிவு ஏற்பட்டு, தண்ணீர் முற்றிலும் தடைபட்டுள்ளதால் வரும் பருவ மழை காலத்திற்கு முன்னதாக சீரமைப்பு பணிகள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டு ஆலந்துறையாறு, அனுமன் நதி பாசன விவசாயிகள் நேற்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு வை சந்தித்து கோரிக்கை விடுத்தனர் . இதை ஏற்ற சபாநாயகர் அப்பாவு உடனடியாக கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லின், உதவி பொறியாளர் சுபாஷ் மற்றும் ஆலந்துறையாறு, அனுமன் நதி பாசன விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலந்துறையாறு சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதி குமரிமாவட்ட வனத்துறை பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனோடு சபாநாயகர் அப்பாவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சீரமைப்பு பணிகள் நடப்பதற்கு அனுமதி வழங்க கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஆலந்துறையாறு கால்வாய் மண்சரிவு அகற்றுதல் மற்றும் சீரமைப்பு பணிகளை கிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் விரைவாக நிறைவேற்றிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஆலந்துறையாறு கால்வாயில் மண்சரிவு அகற்றுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் விரைவாக தொடங்கப்படும் என ஆலந்துறையாறு, அனுமன் நதி நாற்பத்தி ஏழு பாசன குளங்களின் விவசாயிகளிடம் சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்தார்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்