நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு

நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு
X

பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு காவல்துறை சார்பில் நடைபெற்றது.

பெண்கள் பாதுகாப்புக்கு இலவச தொலைபேசி எண் 181 குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு, குற்ற நடவடிக்கைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா விழிப்புணர்வு அளிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் வள்ளியூர் பகுதியில் உள்ள நேரு நர்சிங் கல்லூரி பெண்களுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சகாய ராபின் சாலு ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் காவலன் செயலி குறித்தும் எடுத்துரைத்தனர்.

பெண்கள் பாதுகாப்புக்கு இலவச தொலைபேசி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!