ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது, 8 ஆடுகள், பணம் பறிமுதல்

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது,  8 ஆடுகள், பணம் பறிமுதல்
X
பைல் படம்
ஆடுகள் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 ஆடுகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த இரண்டு மாதங்களாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய சரகத்தில் இளைய நயினார் குளம், ,உதயத்தூர், பண்ணையார் குளம் ஆகிய கிராமங்களில் பல்வேறு ஆடுகள் திருட்டு நடந்து வந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வைராவி கிணறு நடுத்தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் அஜித்குமார் என்பவரை ராதாபுரம் காவல் நிலையம் பொறுப்பு வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் வள்ளி நாயகம் மற்றும் போலீசார் பிடித்த்தனர்.

விசாரணையில் இந்த பகுதியில் ஆடுகளை திருடியது தெரியவந்ததுங இதனையடுத்து அவரிடமிருந்து 8 ஆடுகள் மற்றும் ஒரு லட்சத்திற்கு மேல் பணம், இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து அஜித் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!