அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திநிலையம்-அப்பாவு திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவு படி, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினை இன்று திறந்து வைத்தார்.
எல் & டி நிறுவனத்தின் சார்பில், நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பில், கூடங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.85 இலட்சம் மதிப்பில், இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான இயந்திரங்கள் துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்து அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.35 இலட்சம் மதிப்பில், கட்டுமான பணிகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் ரூ.1.20 கோடி மதிப்பில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் இயந்திரம் 500 டுPஆ அளவில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும் ஒரே சமயத்தில் 400 முதல் 500 படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கான வசதிகள் கொண்டது.
இது குறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி, கூடங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் எடுத்த போர்க்காலநடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இந்த கூடங்குளம் அரசு மருத்துவமனையில், 100 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய, படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு தேவை என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுகாதாரத்துறை அமைச்சர், இந்த கூடங்குளம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது பிரசவ வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலையையும், எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் மற்றும் கொரோனா சிகிச்சை பாராமரிப்பு மையங்களில் அடிப்படை வசதிகளான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவிலே, தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.
மேலும் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தில் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி.,கூடங்குளம் வளாக இயக்குநர் ராஜீவ் மான்சர் காட்போலி, இணை இயக்குநர் சுகாதார பணிகள் நெடுமாறன், இராதாபுரம் வட்டாட்சியர் இயேசுராஜன், எல் & டி நிறுவனத்தின் சார்பில், எஸ்.ஏ.சுப்பிரமணியன், கே.சுரேஷ், எம்.கண்ணன், டி.மகேஸ்வரன்,மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu