ஏர்வாடி அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை திருடியவர் கைது

ஏர்வாடி அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை திருடியவர் கைது
X
ஏர்வாடி அருகே வேப்பங்குளத்தில் கோவில் பூட்டை உடைத்து நகைகளை திருடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வேப்பங்குளம், அங்கு மேலூர் வடக்கு தெருவைச் சேர்ந்த அப்பாதுரை என்பவர் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வனப்பேச்சி அம்மன் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். கடந்த 02.07.2021 அன்று கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஒன்றரை பவுன் மதிப்புள்ள பொட்டு தாலியை மர்ம நபர் திருடி விட்டதாக ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்த நிலையில், கோவில் பூட்டை உடைத்து நகைகளை திருடியது அதே ஊரைச் சேர்ந்த ஆதிநாராயணன் (44) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஆதாம்அலி குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவரிடமிருந்து ஒன்றை பவுன் மதிப்புள்ள நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது