நெல்லை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று சிவாஜி நினைவு நாளில் அவரது ரசிகர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள குட்டத்தைச் சேர்ந்தவர் சிவாஜி முத்துக்குமார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். இவர் பெருந்தலைவர் காமராஜரின் பக்தர். தமிழ்நாடு காமராஜர்- சிவாஜி பொதுநல இயக்கத்தின் தலைவராக இருக்கும் சிவாஜி முத்துக்குமார் ,மறைந்த தேசிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களை சிறப்பாக நடத்தி வருகிறார்.
திசையன்விளை அருகே உள்ள குட்டம் ஊராட்சி வெம்மணன்குடியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, காமராஜர், சிவாஜியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள், பெண்களுக்கு ரோஜா செடிகள் வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், தேசிய தலைவர்களின் நினைவு சின்னங்களை மீட்டெடுத்து மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu