திசையன்விளை அருகே 500- க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகி சேதம்

திசையன்விளை  அருகே 500- க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகி சேதம்
X

தீயில் கருகிய வாழைகள்.

Tirunelveli Local News in Tamil Today- திசையன்விளை அருகே தோட்டத்திற்கு மேல் சென்ற மின் கம்பத்தில் ஏற்பட்ட உராய்வினால் 500க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகின.

Tirunelveli Local News in Tamil Today-நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏழோடை என்னும் பகுதியில் தத்துவனேரியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். இவர் வாழை பயிரிட்டு வரும் இடத்திற்கு மேல் மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தன.

இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி உருவாகி சுமார் 500க்கும் மேற்பட்ட வாழைகள் தீப்பிடித்து தீயில் கருகின. மேலும் அருகில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து திசையன்விளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மேலும் தீ வராமல் இருக்க தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகவும் இரண்டு லட்சம் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயி வெற்றிவேல் வேதனையுடன் தெரிவித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்