நெல்லை அருகே 4 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இடையேயான குங்பூ போட்டி

நெல்லை அருகே 4 மாவட்ட  மாணவ, மாணவிகளுக்கு இடையேயான குங்பூ போட்டி
X

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குங்பூ போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வள்ளியூர் வட்டார துணை கண்காணிப்பாளர் சாய் மீனா சிங் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நான்கு மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இடையேயான குங்பூ போட்டி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மாவட்டங்களுக்கு இடையேயான குங்பூ போட்டி நடைபெற்றது.வள்ளியூர் குங்பூ பயிற்சி பள்ளியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இடையேயான 25 வயதிற்கு உட்பட்ட ஏழாம் ஆண்டு குங்பூ போட்டி மற்றும் பள்ளியின் பவுண்டர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

பள்ளியின் மாஸ்டர் சிபு கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வள்ளியூர் வட்டார துணை கண்காணிப்பாளர் சாய் மீனா சிங் கலந்து கொண்டார்.

குங்பூ போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ- மாணவியருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் விக்டர் ஜெபசிங், மகாலட்சுமி, அசோக்ராஜ், செல்வமணி, மூர்த்தி, கணேசன், கோகுல்நாத், வேல்முருகன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குங்பூ பயிற்சி ஆசிரியர் செய்திருந்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!