வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் நிர்மலா கணேசனை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை.
தமிழகம் முழுவதும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நெல்லை மாவட்டம், வள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் போட்டியிடம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வள்ளியூர் பகுதிகளில் வீதிவீதியாக தெருக்களில் நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுக தொண்டர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வாக்கு சேகரித்தார்.
வள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நல்லகுமார் மற்றும் 2 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான நிர்மலா கணேசனுக்கும் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu