கல்குவாரி வெடியால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்: 3 வயது சிறுவன் பலி

கல்குவாரி வெடியால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்: 3 வயது சிறுவன் பலி
X

வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் கிராமத்தில் கல் குவாரி வெடித்ததில் சேதமடைந்த வீடு.

சீலாத்திகுளம் கிராமத்தில் கல்குவாரியில் வெடி வெடித்ததில், வீட்டின் மேற்கூரை விழுந்தது; இதில், 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் கிராமத்தில், கல் குவாரியில் வெடிகள் வைத்து தகர்த்த நிலையில், கிராமத்தில் உள்ள முருகன் என்பவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து. இடிந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கி, மூன்று வயது குழந்தை ஆகாஷ் உயிரிழந்ததாக, அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

குவாரிகளில் வெடிவைத்து தகர்க்கும் போது வீடுகளில் விரிசல் விழுந்து வருவதாகக் கூறியுள்ள பொதுமக்கள், ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகள், அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக, தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெடிவிபத்தால் மேற்கூரை இடிந்து குழந்தை பலியான நிலையில், குழந்தையின் உடலை எடுக்க விடாமல், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!