வள்ளியூர் புனித பாத்திமா அன்னை தேவாலய தேர் பவனி!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா அன்னை தேவாலய தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
வள்ளியூரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை தேவாலய திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடக்கும். இதில் வள்ளியூர் மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் மாதாவின் அருள் வேண்டி வருகை தருவார்கள்.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 12ம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு புனித பாத்திமா அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வீரபாண்டிய பட்டணம் பங்கு தந்தை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனக் கூட்டம் நடைபெற்றது. நேற்று காலை வடக்கன்குளம் மறைமாவட்ட முதன்மை குருவானவர் தலைமையில் ஆடம்பர பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவியருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. 7.30 மணிக்கு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu