திசையன்விளையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

திசையன்விளையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
X

மனநலம் பாதிக்கப்பட்ட முருகன்.

திசையன்விளையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவரை முகநூல் நண்பர்கள் குழுவினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் ஒருவர் சுற்றித் திரிந்தார். இதுபற்றி அறிந்த திசையன்விளை அன்பு முகநூல் நண்பர்கள் முத்துக்குமார் மற்றும் சுடலை கார்மேகம் ஆகிய இருவரும் விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி முருகன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து காலில் புண்களுடன் காணப்பட்ட முருகனை நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தங்கவைத்து, தங்களுடைய முழு செலவில் கடந்த 40 நாட்களாக பராமரித்தனர். குணமடைந்தபின் முருகனை காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட், முருகனை ஆதரவற்றோர் காப்பகத்தில்சேர்த்தார். மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் உணவு இல்லாமல் சுற்றித் திரிந்த பூ வியாபாரியை பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்த முகநூல் நண்பர்கள் குழுவின் மனிதநேயத்தை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!