நெல்லை ஶ்ரீ சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா

நெல்லை ஶ்ரீ சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா
X

திசையன்விளை ஶ்ரீ சண்முகநாத சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடந்தது.

திசையன்விளையில் ஶ்ரீ சண்முகநாத சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி, பூஜைகள் நடைபெற்றன.

நெல்லை மாவட்டம் திசையன்விளை ஶ்ரீ சண்முக நாத சாய்பாபா கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு வாரம் தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இக்கோவிலில் இன்று குரு பூர்ணிமா விழா பூஜைகள் நடந்தது. ஶ்ரீ சாய்பாபாவிற்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. கோவிலில் காலையில் சாய்பாபாவிற்கு காகட ஆரத்தியும், மதியம் சிறப்பு ஆரத்தி பூஜையும், மாலையில் தூப ஆரத்தியும், இரவில் சேஜார்த்தி பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறம் வளர்த்த நாதன் குடும்பத்தினர், ஆசிரியர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் இசக்கியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags

Next Story
ai marketing future