முன்னாள் காதலன் டார்ச்சர் கூலிப்படையை ஏவிய மாணவி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். திடீரென அந்த மாணவி, அந்த மாணவனை விட்டு பிரிந்து வேறு மாணவருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், மாணவியுடன் எடுத்த கொண்ட போட்டோக்களைக் காட்டி வீட்டில் வந்து பெண் கேட்கப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கூலிப்படையை ஏவி விக்னேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி நாங்குநேரி அருகேயுள்ள நடுத்தெருவைச் முத்துமனோ, பொத்தையடி தெற்கு தெருவை சேர்ந்த மாதவன், சந்திரசேகர் என்ற சேகர், பணகுடி விக்னேஷ், களக்காடு பெத்தானியா சர்ச் தெரு அருள்துரைசிங் என்ற கண்ணன் ஆகியேரை கூலிப்படையினராக ஏற்பாடு செய்தார் அந்த மாணவி.
இதனிடையே மாணவி, மாணவனை செல்போனில் பேசி தனியாக வருமாறு அழைத்துள்ளார். மாணவனின் வருகைக்காக கூலிப்படையினர் காத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் களக்காடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொத்தையடி அருகே போலீசாரைக் கண்டதும் அவர்கள் 5 பேரும் தப்பியோடினர்.
அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் 5 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த காதல் தொல்லை சம்பவமும், கொலை முயற்சியும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இவ்விவகாரத்தில் பள்ளி மாணவி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu