நில நடுக்கம்: அச்சத்தில் கூடங்குளம் பொது மக்கள்..!
நெல்லை மாவட்டம் தமிழகத்தின் தென் பகுதியில் இருப்பதால் இங்கு நிலநடுக்கம் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படுவது குறைவு ஆனால் இன்று வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம். பழவூர். உள்ளிட்ட ஊர்களிலும் கடற்கரை கிராமங்களான கூட்டப்புளி லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், பெருமணல். கூடன்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் சுமார் 5 வினாடிகள் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கமான 3.45 மணியளவில் தொடர்ந்து 5 வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்து பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
அதில் குறிப்பாக நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப் பட்டிருப்பதாலும், மேலும் 2 அணுஉலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருவதாலும் அப்பகுதியில் சிறிது வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், நான்குநேரி ஆகிய பகுதிகளில் கனத்த சத்தத்துடன் கூடிய நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu