/* */

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4 பேர் கைது
X

நெல்லையில் காதல் போட்டியில் படுகொலை செய்யப்பட்ட அபினேஷ்

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியைச் சேர்ந்த மீனவர் சிலுவை கித்தேரியான் இவரது மகன் ஆன்றோ அபினேஷ் (20) இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்குமிடையே அவ்வப்போது முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஆன்றோ அபினேஷ்க்கும், சந்துருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆன்றோ அபினேசை சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஆன்றோ அபினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கூடன்குளம் போலீசார் இறந்த ஆன்றோ அபினேசின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்விற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து கூத்தென்குழி பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) , பிரதீஷ் (19), டென்னிஸ் (21), இருதையராஜ் (39) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 Aug 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!