பாரதியார் நினைவு நாள்: திசையன்விளையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை

பாரதியார் நினைவு நாள்: திசையன்விளையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை
X

திசையன்விளையில் பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திசையன்விளையில் மகாகவி பாரதியாரின் 100 வது நினைவு நாளை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நாள் முன்னிட்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாள் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி பிரிவு தலைவர் மும்பை ஜாண் கென்னடி தலைமையில் மகாகவி பாரதியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் கலந்து கொண்டு பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் சார்பில் பாரதியார் உருவம் பொறித்த படங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் எஸ். குமார், மாவட்ட இணைச்செயலாளர் ஐசக், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் கே. எஸ்.ஞானராஜ், ராதாபுரம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ் ரெமிலன், நகர காங்கிரஸ் ஓ.பி.சி பிரிவு தலைவர் சாமில் ராஜா, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் விஜயகுமார், பண்டார நாடார், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்