கூடுதாழையில் தூண்டில் வளைவு! மாவட்ட ஆட்சியர் சொன்ன நற்செய்தி!

கூடுதாழையில் தூண்டில் வளைவு! மாவட்ட ஆட்சியர் சொன்ன நற்செய்தி!
X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மீனவ மக்களுக்கு பயன்பெறும் வகையிலான புதிய திட்டத்துக்கான பணிகளைப் பார்வையிட்டு மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மீனவ மக்களுக்கு பயன்பெறும் வகையிலான புதிய திட்டத்துக்கான பணிகளைப் பார்வையிட்டு மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே அமைந்துள்ளது கூடுதாழை. பாரம்பரிய மீன்பிடித் தொழிலையை நம்பி இந்த கிராமத்து குடும்பங்கள் இருக்கின்றன. கிராமத்துக்கும் கடலுக்கும் இடையே பெரிய மணல் குன்று ஒன்று இருக்கின்றது. ஆனால் இது நாளுக்கு நாள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. தூண்டில் வளைவு அமைத்து கொடுத்தால் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

25 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதி கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராடி வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை என்று அவர்கள் புலம்பி வருகின்றனர்.

மீனவ கிராமமான இதில் பல நூறு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. முதன்மை தொழிலாக மீன்பிடித்தல், அதனை விற்றல் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் நல அமைப்பினர் சிலர் ஒன்று சேர்ந்து மீனவர்களின் நலனுக்காக ஒரு திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி கடந்த மாதம் 19 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 7000 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பஞ்சாயத்து தலைவர் உட்பட சிலர் போராட்டதைக் கைவிடக் கோரி சமாதான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர்.

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைப்பது அவர்களின் முக்கிய கோரிக்கை என்பதை உணர்ந்தே சபாநாயகரும் அந்த தொகுதி எம்எல்ஏவுமான அப்பாவு அங்கு தூண்டில் வளைவு அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், 3 மாதங்களுக்குள் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கும் எனவும் கூறி சமாதானப்படுத்தியதில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் தொழிலுக்கு திரும்பினர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூடுதாழையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மீனவர்களிடையே குறைகளைக் கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பதிலளித்து வந்தார். இந்நிலையில், மீனவர்கள் சிலர் கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைப்பதை தங்கள் கோரிக்கையாக மீண்டும் முன் வைத்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் ஆரம்பகட்ட பணிகள் துவங்கிவிட்டன என்றும், மீனவர்கள் கேட்டுகொண்டபடி போதிய அடிப்படை வசதிகளையும் செய்ய அரசு ஏற்பாடு செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story