வள்ளியூர் அருகேயுள்ள பெட் பொறியியல் கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று

வள்ளியூர் அருகேயுள்ள  பெட் பொறியியல் கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று
X
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் மதிப்பெண்ணை பொறுத்து கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியை செயல்பாட்டின் அடிப்படையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் சககுழு 2 நாட்கள் மதிப்பீடு செய்தது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் மதிப்பெண்ணை பொறுத்து கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆனந்த பெலராவ், பெங்களூரு பல்கலைக்கழக பேராசிரியர் கெம்பையா, ஐதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அல்லா ஆகியோர் கொண்ட குழுவினர் மதிப்பீடு செய்தனர். தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறன், ஆராய்ச்சி வசதிகள், துறைகளின் செயல்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்களின் சாதனைகள், ஆராய்ச்சி வெளியீடுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். கல்லூரியின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்து முதல்வர் மதன்குமார் எடுத்துரைத்தார். உள்தர உறுதிப்பிரிவின் விளக்க காட்சியும் நடை பெற்றது. கல்லூரி வளாக வசதி, தொழில்துறை ஒப்பந்தம், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நிர்வாக சலுகைகள் போன்ற சிறப்பம்சங்களின் செயல்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்களின் சாதனைகள், ஆராய்ச்சி வெளியீடுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். கல்லூரியின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்து முதல்வர் மதன்குமார் எடுத்துரைத்தார். உள் தர உறுதிப்பிரிவின் விளக்க காட்சியும் நடைபெற்றது.

கல்லூரி வளாக வசதி, தொழில்துறை ஒப்பந்தம், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நிர்வாக சலுகைகள் போன்ற சிறப்பம்சங்களை தேசிய மதிப்பீடு, அங்கீகார கவுன்சில் குழுவினர் பாராட்டினர். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் வருகைக்கான முன்னேற்பாடுகளை கல்லூரி நிர்வாக அறங் காவலர் எ.ஷாகுல் ஹமீத், செயலாளர் எஸ்.காஜா மொகைதீன், பொருளாளர் எஸ்.எம்.ஜமாலுதீன் மற்றும் பேராசிரியர்கள், உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.ரேகா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்