போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர் கைது

போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று  வந்தவர்  கைது
X

பைல் படம் 

உவரி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்த நபர் கைது.

போலி பாஸ்போர்ட் மூலம் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரதர் உவரி ராஜா தெருவை சேர்ந்த சுரேஷ் சிங்(50) என்பவர் மீது உவரி காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக சுரேஷ் சிங் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது‌. இதையடுத்து உவரி காவல் துறையினர், சுரேஷ் சிங் நடவடிக்கையை தணிக்கை செய்த போது, அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தது தெரிந்தது. இதுகுறித்து , உவரி காவல் ஆய்வாளர் செல்வி விசாரணை மேற்கொண்டபோது, சுரேஷ் சிங், நெய்க்குப்பை பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்ற பெயரில் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, சட்ட விரோதமாக போலி ஆவணம் மூலம், வெளிநாடு சென்று வந்த சுரேஷ்சிங்கை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!