முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை: சபாநாயகர் வழங்கல்

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை: சபாநாயகர்  வழங்கல்
X

நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார்.

முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், இளம் விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட 211 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார்.

நெல்லை மாவட்டம், இராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர்கள், மாற்றுதிறனாளிகள், இளம் விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட 211 பயனாளிகளுக்கு உதவிதொகையினை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

நிகழ்ச்சியில், இராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்பு திசையன்விளை பேரூராட்சி பகுதியில் உள்ள குருகாபுரம், நந்தன்குளம்சார் பதிவாளர் அலுவலகம் , செல்வமருதூர், மாணிக்க வாத்தியார் தெரு, சண்முகபுரம், முஸ்லிம் வடக்கு தெரு, மின் வாரிய அலுவலகம் அருகில் உட்பட இடங்களில் சுமார் 10 இடங்களில் தார்சசாலை பணி இன்று தொடங்கப்பட்டது. சுமார் 1 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள சாலைப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!