வள்ளியூர் அருகே வேளாண்மை தொழில்நுட்ப கலைப்பயண விழிப்புணர்வு
தெற்கு வள்ளியூரில் நடைபெற்ற வேளாண்மை தொழில் நுட்பம் குறித்த கலைப்பயணம்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை தொழில் நுட்பம் குறித்த கலைப்பயணம் தெற்கு வள்ளியூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வள்ளியூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுனில் தத் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் துணை வேளாண்மை அலுவலர் சாகுல் ஹமீது, உதவி வேளாண்மை அலுவலர் ஷிபா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கவிதா புஷ்பா நிகழ்ச்சிக்கு சிற்பபு விருந்தினராக கலந்துகொண்டு கவுரவித்தார். திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளான பாடல் , நாடகம் மற்றும் நடனம் போன்றவை மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில் நவீன வேளாண் முறை, பூச்சி வகைகளின் பயன்பாடு, நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், திருந்திய நெல் சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணை, உயிர் உரங்கள் பயன்பாடு, உழவன் செயலி பயன்பாடு, சந்தைப்படுத்துதல், விவசாயிகள் ஆர்வலர் மற்றும் உற்பத்தியாளர்கள் குழு அமைத்தல் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு எளிய முறையில் எடுத்துரைத்தனர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து நான்காம் ஆண்டு பயிலும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் அமிர்தா, அனிலா, அஞ்சனா,அஸ்னி, ஆஷா, பால சரஸ்வதி, லக்ஷ்மி ஆகியோர் விவசாய கண்காட்சி நடத்தினர்.
இக்கண்காட்சியில் விவசாயத்திற்கு உதவும் இனக்கவர்ச்சி பொறி, சூரிய மின்விளக்கு பொறி , பழ ஈ பொறி, மஞ்சள் நிற ஒட்டும் பொறி, டி என் ஏ யு தென்னை ஊட்ட மருந்து, நெல் மற் றும் பருத்தி நுண்ணூட்ட மருந்து, டிரைக்கோகிரம்மா, கரைசோபெர்லா முட்டை அட்டை ஆகியவற்றை விவசாயிகளின் பார்வைக்கு வைத்தனர்.
பெஸிலஸ், ரைக்கோடெர்மா விரிடி போன்ற உயிர்ப் பூசணக் கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu