ஆவரைகுளம் கோவிலில் 5 சவரன் நகை திருட்டு! பக்தர்கள் அதிர்ச்சி!

ஆவரைகுளம் கோவிலில் 5 சவரன் நகை திருட்டு! பக்தர்கள் அதிர்ச்சி!
X
ஆவரைகுளம் பகுதியிலுள்ள கோவிலில் அம்மனின் 5 சவரன் நகை திருடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் கோவில் பூட்டை உடைத்து நகை திருடிச் சென்றவர்களைக் காவல்துறையினர் வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைக்குளம் முத்தாரம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அம்மனுடைய 5 சவரன் நகைகளைத் திருடிவிட்டு சென்றிருக்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவரைக்குளத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் செயலாளராக அந்த ஊரின் பண்ணைவிளைத் தெருவைச் சேர்ந்த ஜெயபாரத் என்பவர் இருந்து வருகிறார்.

கடந்த 25ம் தேதி வழக்கம்போல பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலைப் பூட்டிச் சென்றிருக்கிறார். அடுத்தநாள் காலையில் கோவிலின் சேவை பணிகளைத் தொடர்வதற்காக சென்ற நிலையில் அங்கு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் உள்ளே சென்று பார்த்த அவருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இதனையடுத்து ஜெயபாரத் பழவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜெயபாரத்தின் புகாரை ஏற்றுக் கொண்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கினர். கோவிலுக்கு யார் தினமும் வருவார், யார் யார் மீது சந்தேகம் இருக்கிறது என்பது உட்பட பல விசயங்களைப் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products