வள்ளியூரில் 4 ஏக்கர் அடுக்குமாடி குடியிருப்பு: இடத்தினை ஆய்வு செய்தார் சபாநாயகர்
வள்ளியூரிலுள்ள தகுதி வாய்ந்த மக்களுக்கு தமிழக அரசின் மூலமாக இலவச வீடுகள், தாமிரபரணி குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் வள்ளியூர் பஸ்ஸ்டாண்டின் பின் பகுதியில் நவீன ஸ்மார்ட் மார்க்கெட் அமையும் இடம் அதற்கு பதிலாக தற்காலிகமாக மாற்றப்படும் சந்தையின் இடத்தினையும் சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சுமார் 35000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிறப்புநிலை பஞ்சாயத்தாக செயல் பட்டு வரும் இங்கு தினமும் வியாபாரம் மற்றும் கல்வி சம்பந்தமாக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வள்ளியூரில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தினை சபாநாயகர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-
தமிழக முதல்வரின் உத்தரவின் படி வீடில்லாத எளியவர்களுக்கு எந்தவித தடையுமின்றி எளிதான வகையில் உள்ளூர் பஞ்சாயத்தின் மூலம் வீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டித் தரப்படும்.
அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் முதலில் ரூ 1,50,000 முன் பணமாக அரசிற்கு செலுத்த வேண்டும். பின்னர் அரசின் பங்களிப்பாக ரூபாய் 8, 50,000 அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீடுகள் கட்டித்தரப்படும். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறை வேற்றப்படும்.
மேலும் வீடுகளுக்கு தேவையான குடிநீர் வசதி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ராதாபுரம் தொகுதியிலுள்ள 8 டவுண் பஞ்சாயத்துகளும் பயன் பெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினமும் வள்ளியூர் பகுதி மக்களுக்கு 65 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ 271 கோடி ரூபாய் ஆகும். வள்ளியூர் பஞ்சாயத்து பகுதியில் ஏற்கனவே 1500 குடி நீர் இணைப்புகள் வழங்கப்படாமல். காத்திருப்பு பட்டியல்.உள்ளது. அத்துடன் புதிதாக வழங்கப்படும் 2000 இணைப்புகளுடன் அவைகள் இணைக்கப்பட்டு மொத்தமாக அதிவிரைவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன் பெற வழி வகை செய்யப்படுமென கூறினார்.
முன்னதாக வள்ளியூர் பஞ்சாயத்து பின் புறமுள்ள பகுதியில் ரூபாய் 4.50 கோடி மதீப்பீட்டில் புதிதாக அமையவிருக்கும் ஸ்மார்ட் மார்க்கெட் இடத்தினை பார்வையிட்டார். அதன்படி மார்க்கெட் கட்டி முடிக்கும் சுமார் 6 மாத காலம் வரை மாற்று இடங்களை வியாபாரிகளுக்கு டோக்கன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தார்.
மேலும் வள்ளியூர் புதிய பஸ் ஸ்டாண்டில் ரூ 12 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வரைபடத்தினை ஆய்வு செய்து இன்ஜினீயர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் தி.மு.க.நகர செயலாளர் சேது ராமலிங்கம், ம.தி.மு.க.வள்ளியூர் ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் மாடசாமி, தி.மு.க. பிரமுகர் வள்ளியூர் நம்பி, டவுண் பஞ்சாயத்து உதவி இயக்குநர் குத்தாலிங்கம், தமிழ் நாடு குடிநீர் வடி கால் வாரிய இன்ஜினீயர்கள் கென்னடி, ஆவுடையப்பன். தாசில்தார் ஜேசுராஜன், ஆர்.ஐ.திராவிட மணி, வள்ளியூர் டவுன் பஞ்சாயத்து ச்ரயல், அலுவலர் ரவிக்குமார், சுகாதார ஆய்வாளர் ஆறு முகம் மற்றும் பஞ்சாயத்து பணியாளர்கள் திமு.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu