நெல்லை: ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் போலீஸாரால் கைது

நெல்லை: ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் போலீஸாரால் கைது
X

அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தன்குழி பகுதியைச் சேர்ந்த சூசைவியாகுலம்(60), என்பவரின் மகன் கிராவளன்கெயின்ஷ்(30),என்பவர் கடந்த 28 ம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருக்கும் போது, கூத்தன்குழி பகுதியை சேர்ந்த ராஜசரோ(27), சந்தியா குராயப்பன் (35), ஆகிய இருவரும் அவதூறாக பேசி வாங்கிய பணத்தை, உன் தந்தையை கொடுக்க சொல் என கூறியுள்ளனர். பின்‌னர், சந்தியாகுராயப்பன் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கிராஸ்வளன்கெயின்ஷ் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தி இருவரும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சூசைவியாகுலம் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் வினுகுமார் விசாரணை செய்து ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரையும் கைது செய்தார்.

Tags

Next Story
ai in future agriculture