நெல்லை: மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்

மேலப்பாளையத்தில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விமன் இந்தியா மூவ்மென்ட் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா தலைமை உரை ஆற்றினர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடுவக்குறிச்சி ஊராட்சி இரண்டாம் வார்டில் வெற்றி பெற்ற மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அக்டோபர் 20 முதல் 30 வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது, அதன் ஒரு பகுதியாக துண்டு பிரசுர வினியோகம், சுவரொட்டி விழிப்புணர்வு, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இறுதியாக மாவட்ட பொருளாளர் ஜாஸ்மின் நன்றிஉரை ஆற்றினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!