மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்

மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்
X

விமன் இந்தியா மூமென்ட் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் மாடு மற்றும் நாய்களை கட்டுப்படுத்தகோரி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மேலப்பாளையம் பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் தெரு நாய்களை மாநகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த வேண்டும். விமன் இந்தியா மூமென்ட் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

விமன் இந்தியா மூமென்ட் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா தலைமையில் வகித்தார். மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேலப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வகையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் தெரு நாய்களை மாநகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த வேண்டும் மற்றும் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தி அவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவதற்கு உரிய வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

கூட்டத்தில் பாத்திமா ரிஸ்வானா, அபுகர்மா, மஸ்தான்பீ, மயிதீன்பாத்து உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் பாத்திமா நன்றி உரை ஆற்றினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!