நெல்லையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் சி.காமராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல் வகாப் (பாளையங்கோட்டை), ருபி.ஆர்.மனோகரன் (நாங்குநேரி), ஆகியோர் முன்னிலையில் இன்று (28.12.2021) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் தங்கும் விடுதிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை உயர்த்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித்தொகை பிற்ப்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெற்று தனது படிப்பினை முழுமையாக முடித்து வரும் காலங்களில் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று உயர் பணிகளில் சேர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் த.மு.அப்பாவு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர் மாணவ,மாணவியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு சிறப்பாக நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கு விடுதி கட்டிடங்கள் நல்ல முறையில் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களின் அறிவு திறனை வளர்த்து கொள்ள பேச்சுப்போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இப்போட்டிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மத்திய பல்கலை கழகத்தில் பயிலும் பிறப்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய, மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இச்செய்தியை கிராமப்புறங்களில் உள்ள பிற்ப்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 முதல் 10 ஆம் வகுப்பு படிக்கும் 28,337 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.57 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 11 முதல் மேற்படிப்பு படிக்கும் 1925 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.0.91 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. புரொபஷனல் பட்டயபடிப்பு படிக்கும் 550 மாணவ,மாணவியர்களுக்கு ரூ.1.38 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 30,812 மாணவ.மாணவியருக்கு ரூ.6.86 கோடி மின்னனு பரிவர்த்தனை மூலம் மாணவ.மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை மிக சிறப்பாக கொண்டு செல்ல அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில், 4 நபர்களுக்கு புதிய நலவாரிய அட்டையையும், சீர்மரபினர் நலவாரியத்தில், 7 நபர்களுக்கு புதிய நலவாரிய அட்டையையும், இலவச தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ், 4 பயனாளிகளுக்கு ரூ. 19.4 ஆயிரம் மதிப்பில் தேய்ப்பு பெட்டிகளும் ஆக மொத்தம் 15 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu